“இனி எங்கள நாங்களே பாதுகாத்துக்றோம்”..‘துப்பாக்கி’வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த கோவை மாணவிகள்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

பெண்களுக்கு பாதுகாப்பான சுழ்நிலை இல்லை என கூறி கோவையைச் சேர்ந்த இரு மாணவிகள் துப்பாக்கி வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200 -க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து திருநாவுக்கரசு, சதீஷ், சபரிநாதன், வசந்தக்குமார் ஆகிய நால்வரை போலிஸார் கைது செய்தனர். இதனை அடுத்து நாலவர் மீது குண்டர் சட்டம் சுமத்தப்பட்டு, சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து தங்களது கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது என கூறி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வேண்டுமென கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த சகோதரிகளான தமிழ்ஈழம் மற்றும் ஓவியா ஆகிய இருவரும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் துப்பாகி வேண்டி மனு கொடுத்துள்ளனர். இதில் தமிழ்ஈழம் கல்லூரியிலும், ஓவியா பள்ளியிலும் பயின்று வருகின்றனர். சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பை  அரசு உறுதி செய்யவில்லை எனவும், மேலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தங்களை பயமுறுத்துவதாகவும், அதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் கேட்பதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.

POLLACHISEXUALABUSE, POLLACHIISSUE, POLLACHICASE, COIMBATORE, STUDENTS, COLLECTOR

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்