ஆறுதல் சொல்ல வந்தது குத்தமா? காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. குமரியில் நடந்த பேக் டு பேக் கொள்ளை..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த கோணம் காடு பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவர் அருகில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி, இரணியல் அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். திரும்பி வந்துபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் இருவரும். பதற்றத்துடன் உள்ளே சென்ற பிரான்சிஸ் வீட்டின் பீரோ, மேஜை உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார்.
அப்போதுதான் அதிலிருந்த 18 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து குளச்சல் போலீசாருக்கு பிரான்சிஸ் தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர்.
ஆறுதல்
மரிய பிரான்சிஸ் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த அதே தெருவை சேர்ந்த மரிய அருள்தாஸ் என்பவர் ஆறுதல் கூறுவதற்காக பிரான்சிஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். தைரியமாய் இருக்கும்படியும் காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவார்கள் எனவும் கூறிவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிய மரிய அருள்தாஸ்க்கும் அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் பீரோவை உடைத்து 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 சவரன் நகைகள் களவு போனதை அறிந்த அருள்தாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனிப்படை
இதுகுறித்து அருள்தாஸ் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் மற்றும் டிஎஸ்பி தங்க ராமன் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையை சேர்ந்த மோப்ப நாய் வரவழைக்கப்பட்ட போது, அந்த நாய் மரிய பிரான்சிஸ் வீட்டில் இருந்து அருள்தாஸ் வீட்டிற்கு ஓடி அதன்பிறகு அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று இறுதியாக கோணம் காடு பிரதான சாலையில் வந்து நின்றது. இந்நிலையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்.
கன்னியாகுமரியில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எங்களை காப்பாத்துங்க”.. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பெண்ணின் போன் கால்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- கிரக பிரவேசம் முடிஞ்சு 2 நாள்தான் ஆச்சு.. புதுவீட்டுக்கு குடிபுகுந்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!
- பெண்கள் விடுதியில் லேடீஸ் கெட்டப்பில் உலா வந்து என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. போலீசார் போட்ட தரமான ஸ்கெட்ச்..!
- “என்னோட ஆசை இதுதான்”.. மலை மீது வருங்கால கணவரை கொல்ல முயன்ற ‘இளம்பெண்’ சொன்ன பரபரப்பு வாக்குமூலம்..!
- அந்தமாதிரி படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகம்.. நள்ளிரவில் கணவன் செய்த விபரீதம்..
- "என்கிட்ட சொந்த வீடு கூட கிடையாது..".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்..ஓ இங்கதான் தங்குவாரா?
- நகைக்கடை சுவரில் இருந்த ஓட்டை.. உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த திருடர்கள்..தூத்துக்குடியில் பரபரப்பு..!
- “தம்பி தூங்கிட்டு இருக்கான்”.. வீட்டுக்குள் போக விடாமல் தடுத்த அண்ணன்.. உள்ளே போய் பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- வீட்டு கேட்டில் இப்படி ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருக்கா.. அப்போ உடனே போலீசாரிடம் சொல்லிடுங்க.. நூதன முறையில் நடந்த துணிகரம்..!
- கிச்சடியில் அதிகமாக இருந்த உப்பு.. கோவத்துல கணவன் செஞ்ச விபரீதம்..!