VIDEO: “பூ, அல்வா எல்லாம் வாங்கிட்டு போவாரு.. வெக்ஸ் ஆகி வெளியே வந்ததும் அந்த பொண்ணு சொல்ற Dialogue.. தியேட்டர்ல வெடிச்சு சிரிச்சாங்க”..'செம்புலி' ஜெகன் Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குநர் பாக்யராஜின் ராசுக்குட்டி படம் வெளியாகி 30 வருடம் ஆனதை அடுத்து, பாக்யராஜின் உதவி இயக்குநரும் நடிகருமான ஜெகன், நடிகை ஐஸ்வர்யா மூவரும் அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியை கொண்டு ஒரு ரீகிரியேஷன் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
வைரலான இந்த வீடியோவை தொடர்ந்து நடிகர் ஜெகன் தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்திருக்கிறார். இதில், “ராசுக்குட்டி படம் வந்து இத்தனை வருடம் ஆனதை நான் தான் டைரக்டரிடம் சொன்னேன். அவர் மீண்டும் லேப்டாப்பில் பார்த்துவிட்டு, அட அப்பவே இப்படி ஒரு படம் பண்ணியிருக்கோமேயா என்றார். பின்னர்தான் அந்த வீடியோ உருவானது. நான் பாக்யராஜ் சாரிடம் 6, 7 படங்கள் டைட்டில் கார்டில் பெயர் வருமாறு பணிபுரிந்தேன். பின்னர் வீட்ல விசேஷம் இந்தி பதிப்பு, பாரிஜாதம், விஜயகாந்த் நடிப்பில் பாக்யராஜ் இயக்கிய சொக்கத்தங்கம் படத்திலும் பணிபுரிந்தேன்.” என பேசினார்.
மேலும், அடல்ட்ரியான விசயத்தை கூட முகம் சுளிக்காத வகையில், அனைவருக்குமான படைப்பாக காட்சி படுத்தியிருக்கும் பாக்யராஜின் திரைமொழி குறித்து பேசியபோது, “சுந்தர காண்டம் படத்தில் பாக்யராஜ் சார் ஆசிரியர், அவர் மீது ஒரு மாணவி ஆசைப்படுவார். இவரோ ஆசை ஆசையாக மனைவி பானுப்பிரியாவுக்கு பூ, அல்வா எல்லாம் வாங்கி வந்திருப்பார். அவரோ சாமி, விரதம் என சொல்ல, பாக்யராஜ் சார் சொல்லுவார், ‘தெனம் ஒரு சாமிக்கு விரதம் இருந்தா என்ன பண்றது?’ என டென்ஷனாகி வெளியே வந்து மிகவும் டென்ஷனாக நிற்பார்.
அப்போது அந்த மாணவி அவரது பக்கத்துல வந்து நின்னு, ‘எனக்கு பூ, அல்வாலாம் கூட தேவையில்லைங்க’ என சொல்வார். தியேட்டரில் அப்படி ஒரு கைத்தட்டல் வந்தது. அதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. பாக்யராஜ் சாரின் பல வசனங்களை நாங்கள் உட்கார்ந்து பேசும்போது எதார்த்தமாக வந்தவைதான். திட்டமிட்டு எழுதப்படுவதை விட, ஸ்பாண்டீனியஸாக வந்தவை தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றதை என்னுடைய அனுபவத்தில் பார்த்துள்ளேன்.
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் சாரை, அவருக்கு பிடிக்காத ஒரு பெண் வேணும்னே பொய் சொல்லி கல்யாணம் பண்ணுவா. அவரை Seduce பண்ணுவா. அதுக்குதான் முருங்கைக்காய் விஷயம் வந்தது. அதை ஆண்களை விட பெண்களே ரசித்தார்கள்னுதான் சொல்லணும். அந்த படத்துக்கு பின் மார்க்கெட்டுல போய் முருங்கைக்காய் கேட்டாலே எல்லாரும் திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படி எதாவது பண்ணிவிட்ருவார் பாக்யராஜ் சார்.
ராசுக்குட்டி படம் பாத்தால் முதல் பாதி முழுமையாக காமெடியாகவும், 2வது பாதியில் ஒவ்வொரு சீனும் சோகமாக போகும், ஆனால் ஒவ்வொரு இடத்திலும் எனது காமெடி இருக்கும். டைரக்டர் அதையே விரும்பினார். காமெடி குறையாமல் இறுதிவரை கவனமாக எடுத்துச் சென்றார். ஹீரோ என்றால், குரல் எப்படி இருக்கணும், கண்ணாடி போட்டால் வயதானவர் போல தெரியுமா? என்பது போன்ற டெம்ப்ளேட்டை பிரேக் பண்ணினார் இயக்குநர் பாக்யராஜ் சார். மேலும் ஒவ்வொரு காட்சியிலும் சாரே நடித்து ஸ்கோர் பண்ண வேண்டும் என நினைக்கும் ஆள் அல்ல அவர். அங்கு ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.” என நடிகர் ஜெகன் பேசினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “வேணாம்டா சாமி.. நாங்க இப்படியே இருந்துடுறோம்!”.. தென் கொரியாவில் அதிகரிக்கும் முரட்டு சிங்கிள்ஸ்..? இதுதான் காரணமா?
- இரவு பகலாக தொடர்ந்து 12 நாட்கள் வட்டமடித்த செம்மறி ஆடுகள்..! ஷிப்ட் மாத்தி ரெஸ்ட் வேற.. ஆச்சரியத்தில் உறைந்த நெட்டிசன்கள்.!
- Elon Musk : "ஒரு வாரம் மூடப்படும் ட்விட்டர் அலுவலகம்?".. எலன் மஸ்க் பகிர்ந்த ‘கல்லறை’ Post.. ட்ரெண்ட் ஆகும் RIP Twitter
- "குறுக்க இந்த கௌஷிக் வந்தா..". ஆண் நண்பருடன் வீடியோ காலில் பேசும் பெண்ணை படாத பாடு படுத்தும் செல்லப்பூனை.. வைரல் வீடியோ.!
- "தோழிக்கு ஹாப்பி பர்த்டே".. டான்ஸ் ஆடும்போது பூமி பிளந்து உள்ளே விழுந்த பெண்கள்.. பதைபதைக்க வைத்த சம்பவம்.!
- Neeya Naana : "யாருய்யா இவரு".. ஒரே ஒரு ஐஸ் க்ரீம்.. இந்த வார நீயா நானாவில் ட்ரெண்ட் ஆன இளைஞர்.!!
- ட்ரெண்டாகும் "அட ஆமாங்க".. உருட்டு, க்ரிஞ்ச் அட்வைஸ்களை கலாய்த்து வைரல் பதிவுகள்..
- இது எப்போல இருந்து? ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும் சர்ச் லிஸ்ட்..!! என்னவாம்?
- "தேங்க் யூ சார்.. சாப்ட்டு ரேட்டிங் போடுறேன்.!" .. ஒரு கேட்டில் டெலிவரி ஊழியர்.. அசந்த நேரத்தில், இன்னொரு கேட் வழிவந்த நாய் பார்த்த வைரல் வேலை.!
- "அது என்னய்யா அது ஒரு வார்த்த ட்வீட்?".. ட்விட்டரில் படையெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் ட்வீட்கள்.. பின்னணி என்ன??