எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: குழந்தைக்கு எச்.ஐ.வி பரிசோதனை..வெளியான முடிவு!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsகடந்த வருடம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியலையை உண்டுபண்ணியது.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், இந்த சம்பவத்துக்கு முன்பே, விருதுநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம், ரத்த வங்கியில் கொடுக்கப்பட்டதாகவும், அதனை அறிந்த அந்த இளைஞர் வந்து தகவல் சொல்வதற்குள் இவ்வாறு அசம்பாவிதம் நிகழ்ந்ததால், குற்றவுணர்ச்சியில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியதால் சில மருத்துவ ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வதாக தமிழக சுகாதாரத் துறை உறுதி அளித்தது.
இதேபோல் அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் சென்னையில் அரசு சார்புப் பணியும் பெற்றுத்தரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, குழந்தைக்கு பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை செங்கல்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவில், குழந்தைக்கௌ எச்.ஐ.வி பாதிப்புத் தொற்று இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், மேலும் 6-வது மாதம் மற்றும் 18-வது மாதங்களில் அடுத்தடுத்த சோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OTHER NEWS SHOTS
'உலகக்கோப்பை தானே,பாத்துக்கலாம்னு இருக்காதீங்க'...பின்னாடி வருத்தப்படுவீங்க...எச்சரித்த பிரபல வீரர்!
தொடர்புடைய செய்திகள்
- “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து”..‘நேர்மையாக வாழ்ந்த இன்ஸ்பெக்டர்’.. சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த சோகம்!
- ‘7 ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’.. தாயின் 2 -வது கணவர் செய்த வெறிச்செயல்!
- ஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்!
- ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்’.. பிரதமர் மோடி அறிவிப்பு!
- ‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்!
- கடன் தொல்லையால் யூடியூப் வீடியோ பாத்து கள்ளநோட்டு அடித்த பட்டதாரி பெண்.. ஆனால்..!
- சிதம்பரத்தில் '10 ஆயிரம் பேர் பங்குபெற்ற நாட்டியாஞ்சலி': கின்னஸ் சாதனை புரிந்த கலைஞர்கள்!
- ‘அபிநந்தன் பத்திரமா வரனும்’.. கோயில்களிலும் மதாலயங்களிலும் மக்கள் உருகி பிரார்த்தனை!
- சிறைக்குள் நிர்மலாதேவி தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்!
- 1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!