வீடியோ வெளியிடக் கூடாது, பெயர் வெளியிட்டதுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் வைத்த ‘செக்’!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியது.

பெண்களை பேஸ்புக் மூலம் பேசி, நட்பு வலையில் வீழ்த்தி, நம்ப வைத்து இளைஞர் கும்பல் செய்த கொடுஞ்செயல் வீடியோவாக பரவி அப்பெண்களையும் அனைத்து பெற்றோர்களையும் தீராத மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதுபற்றி பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை எழுப்பினர்.

அந்த இளைஞர் கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமின் கேட்டு அவர்களின் உறவினர்கள் கோரி வருகின்றனர். ஆனாலும் இந்த இளைஞர்களை கைது செய்வது தண்டனையாகாது, உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், தைரியமாக புகார் அளிக்கலாம் என காவல்துறை போன் நம்பர்களை அளித்ததோடு, புகார் அளிப்பவர்களின் விபரங்கள் காக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, ஏற்கனவே புகார் அளித்த பெண்களின் பெயர்களை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டதற்கு கமல் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனை அடுத்து தமிழக அரசு அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களின்றி வெளியிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் சம்மந்தப்பட்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

POLLACHICASE, POLLACHISEXUALABUSE, MADURAIHIGHCOURT

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்