பெங்களூரை அடுத்து சென்னையிலும் பற்றி எரிந்த 200 கார்கள்: திடீர் தீவிபத்தால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

நேற்றைய தினம் பெங்களூரில் 100 கார்கள் ஏரோ இந்தியாவுக்காக நிறுத்தப்பட்டிருந்தபோது தீ விபத்தில் எரிந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இந்நிலையில், இன்று மதியத்துக்கு பின், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் காலி மைதானத்தில் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 500 கார்களில் 200 கார்களைத் தவிர்த்து மற்ற கார்களில் தீப்பற்றி முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நிற்கவைக்கப்பட்டிருந்த கார்களில் உண்டான தீயினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் அங்கு தீயினால் உருவான கரும்புகை பல மணி நேரம் நீடித்தபடி இருந்துள்ளது. அருகில் மருத்துவமனை இருப்பதால், இதுபோன்ற மாசுமண்டலம் நோயாளிகளை சிரமத்துக்குள்ளாக்கி வந்த நிலையில், தீப்பற்றியதற்கான காரணத்தை அறிவதற்கான முதற்கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

மின்கசிவு, காஸ் லீக்கேஜ் என எந்த ஒரு விஷயம் கார்களில் தீப்பற்றியதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிற கோணத்தில் காவல்துறையினர் முதல்கட்டமாக விசாரித்ததில், கார்களுக்கும் அந்த மைதானத்துக்கும் சொந்தமானவர்கள், சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FIREACCIDENT, CHENNAI, PORUR, CARS, BIZARRE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்