‘கந்துவட்டி கொடுமை’.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

கந்துவட்டி கொடுமையால ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சில நாள்களுக்கு முன்பு குடும்பச் செலவுக்காக ரூ.40 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து அந்தோணிராஜிடம் கந்துவட்டிக்காரர்கள் பணத்தை திரும்பச் செலுத்த சொல்லி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அந்தோணிராஜ், தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோருடன் திடீரென தான் கொண்டுவந்த மண்ணென்னையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்த மண்ணென்னை கேனை கைப்பற்றி, காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KARUR, LOAN, FAMILY, SUICIDEATTEMPT

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்