‘கட்சி கூட்டத்தில் காலி நாற்காலிகள்’.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsதேர்தல் கூட்டத்தில் காலியாக காணப்பட்ட நாற்காலிகளை புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததால் கைகலப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் கூட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் எழுந்து சென்றதால், நாற்காலிகள் காலியாக காணப்பட்டன.
இதனையடுத்து, பத்திரிக்கையாளர்கள் சிலர் காலியான நாற்காலிகளை புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அதனைப் பார்த்த தேர்தல் கட்சிக் கூட்டத்திலிருந்த சில பேர், போட்டோ எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இடையே கைகலப்பு மற்றும் சலசலப்பு வெகுநேரம் நீடித்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வாக்கு சேகரிப்புக் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் நாகர்கோவில் தேர்தல் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல்! இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்!
- சுஷ்மாவின் ஆளுமை.. அமைச்சரின் பணிவு.. சுவாரஸ்யமான நிகழ்வு.. வைரல் வீடியோ!
- காங்கிரஸ் ஜெயித்தால்! பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு!
- “மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா?”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ!
- 'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்!
- 'நாங்க போட்டியிட்டா அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும்'...நிபந்தனையற்ற ஆதரவு...ஜெ.தீபா அதிரடி!
- ‘மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டேன்’.. பாஜக -வில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!
- எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: குழந்தைக்கு எச்.ஐ.வி பரிசோதனை..வெளியான முடிவு!
- ‘ஓட்டு கேட்க போகும்போது பாஜக தொண்டர்கள் எப்படி போகணும்?’.. தமிழிசையின் பதில்!
- 'தலைமை சொல்றதுக்கு முன்னாடி முந்திய ஹெச்.ராஜா'... ஏன் அப்படி சொன்னார்?