தேர்தல் பற்றிய புகாருக்கு cVIGIL செயலி.. வாக்களித்தது யாருக்கு என்பதை அறிய V-VPAT இயந்திர முறை!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தேர்தல் பற்றிய புதிய அறிவிப்புகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேசிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் குறித்த புதிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வோர் 5 ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு முதல் வாக்களித்த அனைவரும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய  V-VPAT என்னும் இயந்திர முறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தேர்தல் வீதி மீறல்கள் குறித்த புகார்களை cVIGIL என்னும் செயலி மூலம் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 1950 என்ற எண்ணில் அழைத்து வாக்காளர்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா போன்ற சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ELECTION2019, CVIGIL, APP, VOTE

OTHER NEWS SHOTS