கனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு! திமுகவினர் அதிர்ச்சி! காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மேலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி என 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
அதில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்புமனுவில் உள்ள பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால், இவரது வேட்பு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘மய்யத்துடன் கூட்டணி இல்லை.. தென் சென்னையில் போட்டி’: பவர் ஸ்டாரின் பிரத்யேக பேட்டி!
- தேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி?
- 40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல்! இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்!
- அட இங்கையும் பிரச்சாரமா? தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி!
- மக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்!
- காங்கிரஸ் ஜெயித்தால்! பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு!
- “மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா?”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ!
- ‘பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது’: ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
- 'கமல் போட்டியிடுகிறாரா'?...பல்லாக்கில் ஏறி இருக்குறத விட...அதை சுமக்க தான் எனக்கு புடிக்கும்!
- ’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!