COOK WITH COMALI : ‘ஓட்டேரி நூடுல்ஸ்.. நார்த் ஈஸ்ட் மோமோ’.. குக் வித் கோமாளி 4 வது சீசன் ட்ரெய்லர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்று சொன்னால் பிக்பாஸ் அடுத்ததாக இன்னொரு ஷோ அனைவரையும் கவர்ந்தது.

COOK WITH COMALI : ‘ஓட்டேரி நூடுல்ஸ்.. நார்த் ஈஸ்ட் மோமோ’.. குக் வித் கோமாளி 4 வது சீசன் ட்ரெய்லர்.!
Advertising
>
Advertising

Also Read | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்

சொல்லப்போனால் இல்லத்தரசிகள் உட்பட வீட்டிலிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு இன்னொரு முக்கியமான ஷோ குக் வித் கோமாளி. இந்த ரியாலிட்டி ஷோ, இதுவரை விஜய் டிவியில் 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. சமையல் போட்டியை மிகவும் வித்தியாசமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காண்பிக்கும் இந்த ஷோவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். முதலாவது சீசனில் பல செலிபிரிட்டிகள் சமைப்பதற்காக போட்டியாளர்களாக இந்த ஷோவில் களமிறக்கப்பட்டனர்.

Cook With Comali Season 4 trailer குக் வித் கோமாளி

முன்னதாக அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி, குரேஷி, சூப்பர் சிங்கர் பரத், KPY சரத் , மணிமேகலை, சுனிதா, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பாத் இருவரும் நடுவர்களாக உள்ளனர். அவ்வப்போது மதுரை முத்து, உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது உண்டு.

இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். 3வது சீசனில் ரோஷினி ஹரிபிரியன், வித்யூலேகா, ஸ்ருதிகா மற்றும் பலர் சமையல் செய்பவர்களாக கலந்துகொண்டனர். இவர்களுள் ஸ்ருதிகா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் கலக்கலான 4வது சீசன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ஓட்டேரி சிவா, ஜிபி முத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். விஜே ரக்‌ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தெரிகிறது.

Also Read | “லலிதாவின் ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி உருவான கதை இதுதாங்க” ― மனம் திறந்த BH அப்துல் அமீது.! Exclusive

COOK WITH COMALI 4, COOK WITH COMALI SEASON 4, GP MUTHU COOK WITH COMALI, OTTERI SIVA

மற்ற செய்திகள்