'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியதால், தற்போது மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதில், அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அத்துடன் அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதமும், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதமும், கோடம்பாக்கம் 2.7 சதவீதமும், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பை விட 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று புதிதாக 1,348 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,72,773 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,57,216 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,274 ஆகவும் உள்ளது. அத்துடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,283 ஆகவும் உள்ளது. இந்நிலையில் சென்னை மண்டலங்களில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் மட்டுமே 16 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'ஓபிஎஸ் ட்வீட்'.. 'முதல்வரின் ஆலோசனை'.. முதல்வர் வேட்பாளர் யார்? சூடுபிடிக்கும் அதிமுக அரசியல் களம்!
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த பொட்டலத்த ஸ்மெல் பண்ணினாலே போதும்...' 'கொரோனாவால வாசனை, ருசி தெரியாதவங்களுக்கு செமயா workout ஆகுது...' இத எப்படி பண்றது...? - சித்த மருத்துவர்கள் அசத்தல்...!
- 8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்!.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி?.. தென்னக ரயில்வே 'அதிரடி'!.. கொந்தளித்த ரயில் பயணிகள்!
- 'கண்டெய்னர் லாரியை'.. 'மடக்கி மிரட்டுறது ஒரு ரகம்னா.. இன்னொரு ரகம்'.. 'சினிமாவை மிஞ்சும் நிஜ கும்பல்'!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- சென்னையில் 'விறுவிறுப்பாக' உருவாக்கப்படும் குட்டி 'காடுகள்'!.. மாநகராட்சி 'அதிரடி' நடவடிக்கை!.. வெளியான பரபரப்பு தகவல்!
- டிரம்புக்கு ஆபத்தா?.. 'அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை!'.. மருத்துவர்கள் பகீர் கருத்து!.. அமெரிக்காவில் பரபரப்பு!
- “மேலும் 5,622 பேருக்கு கொரோனா!”.. வெளியான பலி எண்ணிக்கை! தமிழகத்தில் இன்றைய பாதிப்பு.. முழு விபரம்!
- “4 வருஷமா இப்படி ட்வீட் பண்றது...”.. அமெரிக்க முன்னாள் தேர்தல் செய்தித் தொடர்பாளரின் ‘சர்ச்சை ட்வீட்டும்.. உடனடி டெலிட்டும்’.. கிளம்பிய கடும் விமர்சனங்கள்!
- 'ஊர்ல அமெரிக்கா ரிட்டர்ன்னு எவ்வளவு பெருமையா இருக்கும்'... 'ஆனா இப்படி ஒரு நிலைமையா'?... அதிரவைக்கும் அறிக்கை!
- 'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்!!!'...