கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், ஏராளமான மனித உயிர்களை பலி கொண்டுள்ளது. வயது வரம்பின்றி அனைவரையும் பாதிக்கும் இந்த கொடிய வைரஸுக்கு, கர்ப்பிணி பெண்கள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தையையும், கர்ப்பிணியையும் காப்பாற்றுவது மருத்துவர்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சௌமியா(24) என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த அவரை சென்னையில் உள்ள MIOT மருத்துவமனை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.

அவர் MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, மிகமோசமான நிலையில் இருந்தார். கடுமையான சுவாசப் பிரச்னையில் சிக்கித் தவித்த அவருக்கு, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் அபயாகரமான உடல் நிலையில், ICUவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல்துறை நிபுணர்களின் துணையால் அவருடைய உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

MIOT மருத்துவர்களின் அயராத உழைப்பால், அவர் 16 நாட்கள் கழித்து கொரோனா நெகடிவ் ஆனார். குழந்தையின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்பட்டு, இரு உயிர்களையும் MIOT மருத்துவர்கள் மீட்டுள்ளனர். மேலும், MIOT மருத்துவமனையில் தற்போதுவரை 4,000 த்துக்கும் அதிகமான கோவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வீடியோ இணைப்பு:

https://drive.google.com/file/d/1UTYAPieoMielP4PdEHV01miCTML2V4XP/view?usp=sharing

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்