முன்பைவிட ‘இன்னும் அதிகாலையிலேயே’.. மாறிய மெட்ரோ ரயில் நேரம்.. உற்சாகத்தில் சென்னைவாசிகள்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

சென்னையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வந்த மெட்ரோ ரயில் சேவையினால் பலரும் பலனடைகின்றனர்.

சற்றே அதிக கட்டணம்தான் என்றாலும், வழக்கத்தை விடவும் சென்னையின் புறநகர் பகுதிகளை மிகவிரைவாக சென்றடையும் விரைவான போக்குவரத்து டைமிங்தான் மெட்ரோவில் ஹைலைட். அதனாலேயே பலரும் மெட்ரோ சேவையை பயன்படுத்தத் தொடங்கினர்.

ஆனால் ரெகுலராக அலுவலகங்களுக்கு செல்வோருக்கு சிரமமாக இருக்கும் வகையில் மெட்ரோ 7 மணிக்கு மேல் மட்டுமே இதுநாள் வரை இயக்கப்பட்டு வந்தது. இதனால் காலையிலேயே சீக்கிரம் கிளம்பினால்தான் அலுவலக நேரத்துக்குள் சென்றுவர முடியும் என்று எண்ணிய பலரும் தவித்து வந்தனர். ஆனால் இனிமேல் வரும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை  காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்கிற புதிய அறிவிப்பினை தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் முந்தைய நேரமானது, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கடைபிடிக்கப்படும். அதாவது ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

METRO, RAILWAY, CHENNAI

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்