'ஐபோன், விமான பணிப்பெண் வேலை என'... 'ஆளுக்கேற்ப வலை விரித்து சென்னை இளைஞர் பார்த்த வேலை'... 'வெளியான திடுக்கிடும் தகவல்கள்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுவந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேப்பேரியை சேர்ந்த திலீப் (28) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் திலீப் என்ற அந்த இளைஞருக்கு, கீழ்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் பிரவீன் என்பவரிடம் ஆப்பிள் செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ 2,75,000 மோசடி செய்தது, விமான பணிப்பெண் வேலை வாங்கி தருவதாக கூறி பேஸ்புக் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி லட்சக்கணக்கில் மோசடி செய்தது என பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் போலீசில் நகை திருட்டு புகார் ஒன்றை திலீப் மீது கொடுத்துள்ளதாகவும், பதிலுக்கு அந்த பெண் மீது திலீப்பும் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை சிறைக்கு சென்றுள்ள திலீப், தற்போது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இ-பாஸ் ஈஸியாயிடுச்சுனு .. சென்னைக வர்றவங்க அதிகமாவாங்க! அப்படி வர்றவங்களுக்கு இதான் நடக்கும்!” - மாநகராட்சி அதிரடி!
- 'பணப் பிரச்சனை, பட வாய்ப்பில் சிக்கலா?'... '2-3 வருஷத்துல சம்பாதிச்சது மட்டும் இத்தனை கோடி!'... 'வெளியான முக்கிய தகவல்'...
- கொரோனா பாசிட்டிவ் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளித்து சென்னை MIOT மருத்துவமனை சாதனை!
- “இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல!”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
- 'இறந்து போய்ட்டான்னு வந்து சொன்னாங்க...' 'இப்படி பண்ணாத'ன்னு தலையா அடிச்சுக்கிட்டோமே... - 3-வது மாடில விழுந்த சிறுவன்...!
- ‘3 மாதத்தில் 2ம் கணவரை பிரிந்து’.. நகை, பணம், காருடன் மாயமான பணக்கார பெண்.. 4 வருடம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'சென்னையின் பிரதான ஏரியாக்களில்'... 'நாளை (18-08-2020) பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'..
- 'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
- 'தவறுதலாக கோடிகளை டிரான்ஸ்பர் செய்த வங்கி'... 'இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்கள் கொடுத்த டிவிஸ்ட்'... 'சிக்கலில் பிரபல நிறுவனம்!'...
- 'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்!