'உணவு டெலிவரி செய்வதுபோல நாடகமாடி'... 'சென்னையில் இளம்பெண் செய்துவந்த வேலை'... 'ரகசிய தகவலை வைத்து வளைத்துப் பிடித்த போலீசார்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உணவு டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் கிண்டி வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்மீது சந்தேகம் ஏற்பட, அவரை மடக்கி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண்ணின் உணவு டெலிவரி செய்யும் பையில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் 32 வயதான அவருடைய பெயர்  வனிதா என்பதும், அவர் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பகுதி நேர கால் டாக்சி டிரைவராகவும், உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு பழக்கமான ஒரு பெண்னாலேயே கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்ததாகவும், உணவு டெலிவரி செய்வதுபோல் கஞ்சாவை மறைத்து கொண்டு போனால் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்கும் என எண்ணி கொண்டுபோனதாகவும் வனிதா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 2 செல்போன்கள், ரூ 500 பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்