‘எந்தெந்த’ பொருட்களை ஹோம் ‘டெலிவரி’ செய்யலாம்?... ‘எதையெல்லாம்’ டெலிவரி செய்யத் ‘தடை’... ‘சென்னை’ மாநகராட்சி ‘அறிவிப்பு’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொருட்களை ஹோம் டெலிவரி செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மளிகை, காய்கறிகள் போன்ற பொருட்களை மட்டுமே ஹோம் டெலிவரி செய்ய அனுமதி என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை உரிய பாதுகாப்புடன் டெலிவரி செய்யப்படவில்லை என்றால் அந்த நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் வீடுகளில் உணவுகளை டெலிவரி செய்யவும், தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து டீக்கடைகளையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆதரவற்றவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், முகக் கவசங்கள், சானிட்டரி நாப்கின்கள், கிருமி நாசினி போன்றவற்றை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெஜெ விளையாட்டு அரங்கிலோ அல்லது அண்ணா நகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்திலோ கொடுத்து உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONAVIRUS, CHENNAI, HOMEDELIVERY, SWIGGY, ZOMATO, GROCERY, BAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்