'கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லாத 9 மண்டலங்கள்'... '3 நாளில் பாதியாக குறைந்த எண்ணிக்கை'... சென்னையில் என்ன நிலவரம்?...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 200க்கும் அதிகமாக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் முன்னதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர் வசிக்கும் தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக மாநகராட்சி அறிவித்து வந்தது. ஆனால் தற்போது ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த தெரு கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. முன்னதாக 200க்கும் அதிகமாக இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 56 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 3 நாட்களில் மேலும் குறைந்து 24 ஆக உள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் சென்னையின் 6 மண்டலங்களில் மட்டுமே உள்ளன. சென்னையில் இவை தவிர மீதமுள்ள 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்ற  நிலை உருவாகியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ள 6 மண்டலங்களில், அதிகபட்சமாக அண்ணாநகரில் 11 இடங்களும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 5 இடங்களும், குறைந்தபட்சமாக திருவிக நகர், வளசரவாக்கத்தில் தலா 1 இடம் மட்டுமே உள்ளன. திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அடையாறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 9 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்