'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்?!!'... 'மாநகராட்சி தகவல்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஊரடங்கு தளர்வால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் மட்டுமே அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கடந்த மாதம் 10க்கும் குறைவான பகுதிகளுக்கே சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து அதிகரித்ததோடு கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் பாதிப்பு அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் வேகமாக அதிகரிக்க, அவற்றை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். முன்போல அல்லாமல் தற்போது ஒரு தெருவில் 2 அல்லது 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தெருவுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதோடு பொதுமக்கள் முககவசம் அணியாததும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்த சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில், "சென்னையில் மொத்தம் 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சூழலில், அதிகபட்சமாக அதில் அம்பத்தூரில் மட்டும் 29 தெருக்கள் உள்ளன. மேலும் மணலியில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டையில் 11 தெருக்களுக்கும், ராயபுரத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகரில் 2 தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்ணாநகரில் 3 தெருக்களுக்கும், தேனாம்பேட்டையில் 4 தெருக்களுக்கும், கோடம்பாக்கத்தில் 3 தெருக்களுக்கும், ஆலந்தூரில் 5 தெருக்களுக்கும், அடையாறில் 4 தெருக்களுக்கும், சோழிங்கநல்லூரில் 2 தெருக்களுக்கும், வளசரவாக்கத்தில் ஒரு தெருவிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்