தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அதிரடி அரசாணை!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

ஒவ்வொரு தேசிய இனங்களின் வரலாற்றிலும் ஒடுக்கப்பட்டவர்கலின் துயரம் மேலோங்கி இருக்கும். இதேபோல் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களின் இருப்பு அந்த தேசிய இனத்தின் தொன்மை நாகரிகத்தை தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். 

எனினும் அத்தகைய மக்கள் தங்கள் வாழ்வில் மேம்படுவதற்கான ஒரு சிறு வெளிச்சமாக கல்வி அவர்களுக்கு உதவும் என்கிற நோக்கில் அவர்களுக்கான இட இதுக்கீட்டு சலுகைகளும், மதிப்பெண்களின் அளவு விகிதத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என்பன போன்ற சலுகைகளும் அளிக்கப்படும் வழக்கம் உருவானது,

மிக அண்மையில் உயர் சாதியில் பிறந்து அதே சமயம்  பொருளாதார ரீதியல் வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் மக்களுக்கான10 சதவீதம் கொண்டுவரபட்டது.  இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியாகியுள்ளது.

இதன்படி, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 35-ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் பி.சி,முஸ்லிம் பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 45-ல்  இருந்து 40-ஆக குறைக்கப்பட்டுள்ளது ஓ.சி பிரிவு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 50-ல்  இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை வரும் 2019-2020 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மா அரசாணையில் தெரிவித்துள்ளார். இதனால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக  குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர். 

TN GOVT, ENGINEERING SEAT

OTHER NEWS SHOTS