‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்’.. பிரதமர் மோடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று சென்னை வந்த பிரதமர் மோடி காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய பிரதமர் மோடி முதலில் ‘காஞ்சிபுரத்துக்கு வணக்கம் சொல்கிறேன்’ என தமிழில் பேசினார்.

இதனை அடுத்து, தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ் மொழி மிக அழகானது. செம்மொழிகளில் தமிழ் முதன்மையானது. நகரங்களிலேயே காஞ்சிபுரம் சிறந்தது. வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளேன்.

நான் தொடங்கி வைத்த விக்ரவாண்டி-தஞ்சாவூர் சாலைத் திட்டம் சென்னையையும், டெல்டா மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் இருக்கும். இது கும்பகோணம் மகாமகம் நிகழ்ச்சியின் போது பயனுள்ளாதாக இருக்கும்.

எம்ஜிஆர் திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர். இலங்கையில் உள்ள எம்ஜிஆர் பிறந்த வீட்டை பார்வையிட்டேன். இதன்மூலம் யாழ்பானத்திற்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை நான் அடைந்துள்ளேன். எம்ஜிஆர் இந்தியாவின் மதிப்புமிக்க அடையாளாமாக திகழ்ந்தவர். அதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் தமிழகத்துக்கு வரும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு ஒலிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NARENDRAMODI, TAMILNADU, CHENNAI, RAILWAYSTATION, MGR

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்