முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது?
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி வைத்து, நிற்கவிருப்பதாக முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்துள்ளார்.
அதன்படி, வருகின்ற ஏப்ரம் 18, 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று (20-03-2019, புதன் கிழமை) சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார்.
2019 - நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான 1-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல், நமக்கான அரசியல், நமக்கான கட்சி என்கிற உயரிய நோக்கத்துடன் தன்னால் முன்னெடுக்கப்பட்டு நமக்கான ஆட்சி அமைக்க வேண்டி, வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்துவதாக குறிப்பிட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆனால் கமல் நிற்கிறாரா இல்லையா? அப்படி நின்றால் எந்த தொகுதியில் நிற்கிறார் என்பன போன்ற விபரங்களையும், 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் குறித்த தகவல்களையும் மார்ச் 24-ஆம் தேதிதான் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த 1-ஆம் வேட்பாளர் பட்டியலைக் கீழே காணலாம்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- என்னாது? ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா?
- ஒரே ஒரு ஓட்டுக்காக.. 39 கி.மீ தொலைவு கடந்து வாக்குச்சாவடி.. அசத்திய தேர்தல் ஆணையம்!
- திமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்!
- நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கும் திரைப்பட இயக்குநர் கவுதமன்!
- 40-லும் தனியே தன்னந்தனியே.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!
- ‘இங்க தனிச்சின்னம்.. அங்க உதயசூரியன் சின்னத்தில் என 2 தொகுதிகள்.. இது ராஜதந்திரம்’.. திருமா!
- எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கூட்டணி கட்சிகளுக்கு? அரசியல் பரபரப்பை தொடங்கிய அதிமுக அறிக்கை!
- 'அதிமுகவுடன் சேரலாம்னு இருந்தோம்'...இப்போ 'கூட்டணி கதவை மூடிட்டோம்'...ஜெ.தீபா அதிரடி!
- ‘ஜனநாயகமே என் உரிமை.. அதை காத்திடத் தானே வாக்குரிமை’.. ஆலயாவின் புதிய முயற்சி!
- ‘அது சரி.. அவர் எப்படி இங்க வந்து பேசலாம்?’.. எலக்ஷன் ரூல்ஸ மீறலாம்.. கல்லூரிக் கல்வி இயக்குனர் கேள்வி!