“ஐதராபாத்ல இருந்து வந்தா பெரியா ஆளா நீ?”.. சீரியல் ஷூட்டிங்கில் வார்த்தையை அசிம்..? பதிலுக்கு கெட்ட வார்த்தையில் திட்டிய ஹீரோயின்.! தேவிப்ரியா Breaking Interview

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

“ஐதராபாத்ல இருந்து வந்தா பெரியா ஆளா நீ?”.. சீரியல் ஷூட்டிங்கில் வார்த்தையை அசிம்..? பதிலுக்கு கெட்ட வார்த்தையில் திட்டிய ஹீரோயின்.! தேவிப்ரியா Breaking Interview
Advertising
>
Advertising

Also Read | "ஒரு முட்டாளை சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டு".. ட்விட்டர் CEO பொறுப்பில் இருந்து விலகும் எலான் மஸ்க்?.. பரபர ட்வீட்!!

ஏறக்குறைய 70 நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசிம் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அசிமை பொறுத்தவரை மற்றவர்கள் கோபப்பட்டு கத்தும் பொழுது ஓடி சமாதானப்படுத்தவும் அவர்களின் சண்டையை விலக்கி விடவும் செய்வார். ஆனால் தான் கோபப்பட்டு கத்தும் பொழுது டென்ஷன் அதிகமாக ஆகும் போது தன்னையே மறந்த நிலைக்கு சென்று விடுவார். இவை அவர் குறித்த பார்வையாளர்கள் மற்றும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸின் இயல்பான கருத்தாக உள்ளது.

bigg boss Azeem fight with heroine Exclusive Devipriya

சமீபத்தில், சாப்பிடாமல் இருந்தது, அதிக டென்ஷன், கோபம், சக்தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசிம் திடீரென மயங்கி விழ, அவரை சக ஹவுஸ் மேட்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்து தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போதுதான் அவருக்கு உயர் அழுத்தம் 190 வரை தென்படுவதாக சொல்லி, மெடிக்கல் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஜனனி எலிமினேஷனுக்கு முன்னதாக அசிம் குறித்து பேசிய கமல்,  “ஒருவரின்  தொழிலைக் குறிப்பிட்டு கிண்டல் செய்வதை நீங்கள் ஒரு பழக்கமா வைத்துள்ளீர்கள். அது இங்கே வேண்டாம். மணிகண்டா சொன்ன மாதிரி நாம ஏன் ஒரு ‘சுமூகமான சமூகமா இருக்கக்கூடாது?’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகை தேவிப்பிரியா, அசிம் குறித்து நிறையவே பகிர்ந்துள்ளார். அஜித் நடித்த வாலி திரைப்படம் தொடங்கி பல திரைப்படங்களில் நடித்த தேவிப்பிரியா, 90களின் புகழ்பெற்ற சீரியல்களான விக்ரமாதித்யன் தொடங்கி, தற்போது தேவயானி நடிக்கும் ஜீ தமிழ் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் வரை நடித்துவருகிறார் நடிகை தேவிப்பிரியா. சன் டிவி பூவே உனக்காக சீரியலில் தேவிப்பிரியா வில்லி ரோலில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் அசிம்  குறித்து தமது பேட்டியில் பேசிய நடிகை தேவிப்பிரியா, “அசிம் எனக்கு பால்ய நண்பர் கிடையாது. என் கணவரின் சீரியலில் அசிம் நடித்தார். சன் டிவி பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார். அவர் சீரியலில் இருந்து விலக, பின்பு அசீம் நடிக்க தொடங்கினார். அசிம் வரும்போது அவர் போட்ட கண்டிஷன்கள், அவர் விதித்த நிபந்தனைகள் அனைத்துக்கும் இசைந்து கொடுக்கும் நிலையில் புரொடக்‌ஷன் இருந்தது. காட்சிகளில் நடிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சொந்தமாக வசனம் பேசுவது, ஷூட்டிங்கில் ஹீரோயிஸம், Attitude காட்டுவது என்றெல்லாம் இருந்தார் அசிம். இதனால் எனக்கும் அவருக்கும் பல முறை வாதம் நீண்டது. 

ஒரு கட்டத்தில், “நீங்கலாம் டைரக்டர் ஆனா நான் நடிக்க மாட்டேன்” என்றார் அசிம் என்னிடம்... நானும் நீ நடிகனே இல்லை என்பதுபோல், உங்களை ஹீரோவாகவே நான் நினைக்கல” என சொன்னேன். அப்போதும் சண்டை அதிகரித்தது. எங்கள் சண்டையை விலக்கவே பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அத்துடன் அது முடிந்தது. அடுத்த நாள் நானும் வந்து நம்மால் யாரும் பாதிக்கப்பட கூடாது என கருதி நடித்துவிட்டேன்.

ஆனால் அவர் மிகவும் தாமதமாக ஷூட்டிங் வந்த அசிம், டைரக்டரை அழைத்து  ‘எனக்கு இப்போ டைரக்டர் யாருனு எனக்கு தெரியணும்.. தேவிப்பிரியாவா? தங்க பாண்டியனா? இல்ல வர்ஷினியா என ஹீரோயினை கை காண்பித்தார். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அந்த பக்கம் அமைதியாக நிற்க, ஹீரோயினுடன் அசிமுக்கு சண்டை தொடங்கிவிட்டது.  நான் ரௌடி மாதிரி சண்டைக்கு தயாராக இருந்தேன். ஆனால் “யு டோன் டாக்” என சொல்லி ஹீரோயினிடம் அசிம் பேசிக்கொண்டிருந்தார். அவளுக்கும் மொழி தெரியாததால், அவளுக்கு வார்த்தை கிடைக்காமல் கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேச தொடங்கிவிட்டாள். எல்லாருமே ஹீரோயினை சமாதானப் படுத்தும் தொனியில் பிடித்துக்கொண்டார்கள்.” என ஷூட்டிங்கில் நடந்த பரபரப்பு சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய தேவிப்ரியா, “நீ ஐதராபாத்ல இருந்து வந்தா பெரிய இவளா நீ? உன்னை செஞ்சிருவேன் என கூறினார். இப்படி யாராவது சொல்வார்களா? சீரியல் என்பது ஃபேமிலி ஆடியன்ஸ் பார்ப்பது.  நீ ஒரு நல்ல ஹீரோ இப்படி பேசலாமா? என்ன நினைப்பார்கள். நான் கெட்ட கேரக்டர் தானே பண்றேனு அப்படி பேச முடியுமா? நடிக்கவே தெரியாம டைரக்டர் திட்டி அழுத கேரக்டர்தான் அசிம்” என தெரிவித்தார்.

Also Read | "கால்பந்து ஃபீவர்ன்னா இதான் போலயே".. மெஸ்ஸி, எம்பாப்பே டீ ஷர்ட் அணிந்து தான் கல்யாணமே.. இணையத்தை கலக்கும் ஜோடி!!

BIGG BOSS TAMIL, BIGG BOSS 6 TAMIL, AZEEM, POOVE UNAKAGA, DEVIPRIYA INTERVIEW, SERIAL ACTRESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்