‘ஜனநாயகமே என் உரிமை.. அதை காத்திடத் தானே வாக்குரிமை’.. ஆலயாவின் புதிய முயற்சி!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

ஆலயா காட்டன் நிறுவனத்தின் புதிய முயற்சி, பலதரப்பில் இருந்தும் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.  இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பிரபலங்கள் பலரும் வாக்களிக்கும் உரிமை மற்றும் வாக்குப்பதிவு செய்ய வேண்டிய கடமை பற்றிய விழிப்புணர்வை கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகி லதா மங்கேஷ்கர்,  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர் போன்றோர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து வாக்குப்பதிவினை வலியுறுத்தி மக்களிடம் அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரபலங்களாகிய நீங்கள் இதைச் சொன்னால் அனைவரிடமும் சென்று சேரும் என்று வேண்டுகோள் விடுத்தார். ‘கண்டிப்பாக நாங்கள் செய்வோம் ஜி’ என்று பதிலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ரிட்வீட் செய்திருந்தார். அதேபோல், ஒரு தொழில் நிறுவனமான ஆலயா காட்டன் இத்தகைய  முயற்சியை தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் ஆலயா காட்டன் நிறுவனம் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தங்களது தார்மீக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. பிரபல விளம்பர மாடல் நடிகர், நடிகையரை நடிக்க வைத்துள்ள இந்த ஆலயா விளம்பரத்தில், ‘என் வாழ்வும் வளமும் என் நாடு.. இதைக் காக்கும் பொறுப்பு என்னோடு.. தமிழ்நாடு என் வீடு.. ஜனநாயகமே என் உரிமை.. அதை காத்திடத் தானே வாக்குரிமை..  நேர்மையோடு வாக்களிப்போம். வாக்கின் தூய்மை காத்திடுவோம்’ என்கிற வரிகள் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாக்குரிமையையும் ஜனநாயக கடமையையும் பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுவதோடு, அந்த கடமையை ஆற்றவும் வலியுறுத்துகின்றன.

இறுதியாக, ‘நூறு சதவீதம் வாக்களிப்போம். பொதுநலச் சிந்தனையுடன் ஆலயா காட்டன் வேட்டிகள்.. சர்ட்டுகள்.. பனியன்கள்’ என்று நிறைவடையும் இந்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பிராண்ட் அம்பாசிடரான ஜெயம் ரவி தோன்றுகிறார். ஜனநாயகக் கடமைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதை ஒரு பெரும் தொழில் நிறுவனம் செய்தல் என்பது ஆரோக்கியமான ஒரு போக்கு என்பதை பறைசாற்றும் வகையில் ஆலயா நிறுவனம் இத்தகைய காணொளியை வெளியிட்டுள்ளது.

LOKSABHAELECTIONS2019, ELECTIONDAY

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்