நடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் நிற்கிறாரா நடிகர் பவர் ஸ்டார்..?
முகப்பு > செய்திகள் > Tamil Nadu newsஇந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிடவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில், இந்திய குடியரசு கட்சி என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்த கட்சிப் பிரிவுகளுள், முதன்மையானதுதான் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் ஏ பிரிவு. இந்த கட்சிதான் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சூசை குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பிறந்த இக்கட்சியில்தான் கடந்த ஓராண்டுக்கு முன்பாக சேர்ந்த பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார். அவர் தற்போது அக்கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் நிற்கவுள்ள இந்த கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ள பவர் ஸ்டார், அந்த தொகுதியில் தனக்கு போட்டியாக ரஜினியையே கருதுவதாகவும், ஆனால் அவர் சந்திக்காத இந்த தேர்தலை தான் தைரியமாக சந்திக்கவுள்ளதாகவும் மக்களைப் பொருத்தவரை தன்னைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை என்றும் அவர்களுக்கு செல்லப் பிள்ளையான தன்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறும் பவர் ஸ்டார், மக்களை நம்பி காந்தி வழியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சூசை உறுதிப்படுத்தியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்னப்பா செய்றது?’: கதறும் தேர்தல் உதவி மையம்!
- மாயாவதியின் அதிரடி முடிவு.. நாடாளுமன்ற அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்!
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு!
- 'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்!
- பிரியங்கா காந்தியை ‘பப்பி’ என்று சொன்னதால், சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
- முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது?
- ‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா?
- என்னாது? ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா?
- ஒரே ஒரு ஓட்டுக்காக.. 39 கி.மீ தொலைவு கடந்து வாக்குச்சாவடி.. அசத்திய தேர்தல் ஆணையம்!
- திமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்!