'நாங்க குற்றப்பரம்பரை.. நீங்க இந்தியாவையே விற்ற பரம்பரை’.. கருணாஸ் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, தமிழர் உரிமைகளை விற்ற பரம்பரை என்று திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் காட்டமாக கூறியுள்ளதுடன், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை அவர்கள், 'வழக்கம் போல பா.ச.க. எஜமான விசுவாசத் திமிரில் எதை பேசவேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது ட்விட்டரில், "நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் நோக்கம் என்ன? என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

'குற்றப்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு?'  என்று கூறிய கருணாஸ், 'குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீர மறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் ஈகத்தை - வரலாற்றை கொச்சைப்படுத்துவதன் நோக்கம் என்ன?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், 'நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல. இந்தியாவை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து நின்று போரிட்டு வென்ற குற்றம் சாட்டப்பட்ட பரம்பரை. ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒரு புறம் இருக்கட்டும்'.

ஆனால் 'நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்ற பரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்று கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

KARUNAAS, TAMILISAI, TAMILNADU

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்