மது வாங்க ஆதார் கட்டாயமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தமிழ்நாட்டில் மது வாங்கும்போது ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது பற்றியும், டாஸ்மாக் இயங்கும் நேரத்தை பகல் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரைக்குமாக மாற்றுவது குறித்தும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது பலரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை அரசின் வருவாய்களில் மிக முக்கியமான வருவாய் ஸ்தாபனம் அரசு மதுபானக்கடை. பண்டிகை நாட்களில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுவுக்கான விற்பனை இலக்கு ஒவ்வொரு முறையும திட்டமிடப்பட்டு அந்த இலக்கை அடைவதை தமிழக அரசு ஒரு சவாலாகவே எதிர்கொள்ளும்.

அதையும் தமிழ்க் குடிமகன்களின் ஒத்துழைப்பால் கடந்த தீபாவளி அன்று தமிழக அரசு அடைந்தது. அதாவது டாஸ்மாக் விற்பனைக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி பல மடங்கு தமிழக டாஸ்மாக் சம்பாதித்து தந்தது. இந்நிலையில் தமிழக மதுபானக்கடைகளில் பார் வசதியை அமைப்பது தொடர்பான டெண்டரை விசாரிக்க வந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பெருமளவில் பார்களிலேயே அதிகமான குற்றச் செயல்கள் நடக்கத் தொடங்குவதாகவும், பார்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் உண்டாவதோடு, முறையான கட்டுப்பாடு இல்லாததால் பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகின்றனர் என்று வருத்தம் தெரிவித்தனர்.

மேலும் பேசிய நீதிபதிகள், இத்தகைய பிரச்சனைகள் இருக்கும் மதுபானக்கூடங்களை (பார்களை) ஏன் நிரந்தரமாக மூடக்கூடாது? மது வாங்க வருபவர்களுக்கு ஆதார் அட்டையை ஏன் கட்டயமாக்கக் கூடாது? டாஸ்மாக்கின் நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை என ஏன் மாற்றியமைக்கக் கூடாது? பார் உரிமத்துக்கான காலத்தை ஏன் 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக உயர்த்தினார்கள்? இவை எல்லாவற்றிற்கும் வரும் மார்ச் 12-ஆம் தேதிக்குள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் பதில் சொல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

TASMAC, TAMILNADU, MADURAIHIGHCOURT

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்