7 பிள்ளைகள் இருந்தும், மாற்று சேலைகூட இல்லாமல் நோய்வாய்ப்பட்டு, தனிமையில் வாடும் தாயின் அவலநிலை!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

11 பிள்ளைகள் பெற்று அவர்களை கரை சேர்க்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து தேய்ந்த தாய், தற்போது நோய்வாய்ப்பட்டு மாற்று சேலைகூட இல்லாமல் பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட நிலைமை மனதை உருக வைத்துள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள முண்டைக்காலை என்கிற ஊரில் 85 வயதான கோலம்மாள் என்கிற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு பிறந்த 11 பிள்ளைகளில் 4 பிள்ளைகள் இறந்துவிட்டனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரும் இறந்துவிட்டார்.

இதனை அடுத்து மீதமுள்ள 7 பிள்ளைகளுக்காக தனி மனிஷியாக தினமும் உழைத்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்கள் தற்போது தங்களது குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

தற்போது கோலம்மாள் முண்டைக்காலில் இருக்கும் அவரது வீட்டில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிமையில் வசித்து வருகிறார். முதுமையின் காரணமாக ஆதரிக்க யாருமின்றி உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டவரை ஊர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக கோலம்மாளின் மகனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் தனது தாயை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது தாய் சேமித்து வைத்திருந்த பணம், பொருட்கள் முதலியவற்றை அபகரித்துவிட்டு மீண்டும் கோலம்மாளை முண்டைகாலில் உள்ள வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாற்று துணி கூட இல்லாமல், நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் மூதாட்டி கோலம்மளை பாதுகாக்க அவரது பிள்ளைகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அந்த ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

7 பிள்ளைகள் இருந்தும் கவணிப்பாரற்று நோயால் வாடும் மூதாட்டி கோலாம்மாளுக்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 11 பிள்ளைகள் பெற்று கடைசி காலத்தில் பிள்ளைகளால் தனிமையில் விடப்பட்ட தாயின் நிலைமை அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.

KANYAKUMARI, WOMAN, LONELINESS

OTHER NEWS SHOTS