'இதெல்லாம் என்ன கெத்தா'?.. ஆபத்தோடு விளையாடிய சென்னை மாணவர்கள்...பதைபதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

சென்னை மின்சார ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது என்பது,தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.அந்த வகையில் இன்று சென்னை மாணவர்கள் சிலர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கு சென்னை புறநகர் மின்சார ரயிலிற்கு உண்டு.பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,அலுவலகம் செல்வோர்,கல்லுரிக்கு செல்வோர் மற்றும் தின கூலி வேலைக்கு செல்வோர் என பல லட்சம் மக்கள் தினமும் மின்சார ரயிலில் பயணிக்கிறார்கள்.காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படும்.இதனால் சிலர் ரயிலின் வாசலில் தொங்கியவாறு பயணிப்பது உண்டு.

இந்நிலையில் கெத்து காட்டுகிறேன் என்ற பெயரில் சில கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ரயிலில் தொங்கியவரும்,ஓடும் ரயிலின்  மேற்க்கூரையில் ஏற முற்படுவதுமாக,ஆபத்தான பயணத்தினை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம்.அந்த வகையில் இன்று சில பள்ளி மாணவர்கள் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிய மின்சார ரயிலில் தொங்கியவாறும்,ரயிலின் மேற்க்கூரையில் ஏற முற்படுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் கன்று பயம் அறியாது என்ற பழமொழி ஒன்று உண்டு.ஆனால் அதனுடைய உணமையான அர்த்தத்தை உணராமல் சமூக வலைத்தளங்களில் வீடியோ போடுவதற்காகவும்,கூட இருக்கும் நண்பர்கள் தங்களை கெத்தாக பார்பதற்காகவும் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனை தடுப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் மற்றும் காவல்துறையினர் ஒரேகோட்டில் நின்று இது போன்ற மாணவர்களை கண்டித்தால் மட்டுமே,நாளைய தலைமுறை அறிவார்ந்த தலைமுறையாய் அமையும்.இல்லையென்றால் இவர்கள் பேராபத்தில் சிக்குவது என்பது நிச்சயம் உறுதி.

TRAIN, VADACHENNAI, ELECTRIC TRAIN

OTHER NEWS SHOTS