புதுசு புதுசா சாதனை பண்றீங்க...'55 பந்து தான்...டி20 போட்டியில்'...புதிய சாதனை படைத்த இந்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில்,சிக்கிம் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில்,மும்பை அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.

மிகவும் பிரபலமான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள்,தற்போது நடைபெற்று வருகிறது.ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியானது மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.இந்திய அணியில் இடம் பெறுவதற்கு இது போன்ற போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனால் வீரர்கள் தங்களின் முழு திறனை வெளிப்படுத்தி இந்த போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

இதனிடையே மும்பை-சிக்கிம் அணிகள் மோதிய போட்டியானது நேற்று இந்தூரில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரஹானே,பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டினார்கள்.மும்பை அணி அடித்த  258 ரன்கள் உள்ளூர் டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.அதோடு உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது அதிகப்பட்ச ஸ்கோர் என்ற பெருமையை பெற்றது.

இந்த போட்டியில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்,55 பந்துகளில் 15 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் எடுத்து புதிய சாதனையை படைத்தார்.இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற ரிஷாப் பன்ட்டின் சாதனையை முறியடித்தார்.

மேலும் சிறப்பாக டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார்.இதற்கு முன் முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்தது.அதனை தான் அடித்த 15 சிக்சர்கள் கொண்டு முறியடித்தார்.

இந்நிலையில் இமாலய இலக்கை எட்ட முடியாமல் சிக்கிம் அணி,20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து தோல்வியினை தழுவியது.

CRICKET, BCCI, T20, SHREYAS IYER, RISHABH PANT

OTHER NEWS SHOTS