'11 வருஷ கேன்சரை நாக்அவுட் செஞ்சு'...மீண்டும் ரிங்கிற்கு வரும் 'WWE' வீரர்...கொண்டாடத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

உலகமுழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட மல்யுத்த போட்டியான WWE,கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் மிக பிரபலம்.இந்தவகையான மல்யுத்த போட்டிகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.அண்டர்டேக்கர், ஸ்டோன் கோல்டு, ராக் இவர்களை தெரியாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இந்தியாவிலும் WWE மிகவும் பிரபலம்.

இந்த தலைமுறையில் WWE காண்பவர்களுக்கு ஆதர்ச நாயகனாக திகழ்பவர் ரோமன் ரெய்ன்ஸ்.இவரது பெயரை சொன்னாலே உணர்ச்சிபூர்வமாக பொங்கி எழும் அளவிற்கு உலகமுழுவதும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.இதனிடையே அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி ரோமன் ரெய்ன்ஸ் கூறினார்.

அது " "தனக்கு லுகுமேனியா என்ற வகையான புற்றுநோய் தாக்கி இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் எனக்கு இருந்தது. அதிலிருந்து நான் மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றன். இப்போது இந்த புற்றுநோய் மீண்டும் என தாக்கியுள்ளது." இதை கூற அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது.ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

அதோடு ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றையும் ரோமன் கூறினார்.''லுகுமேனியாவுக்கு சிகிச்சை பெறவுள்ளதால்,போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் நான் இல்லை. அதனால் WWE வில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இதோ இந்த சாம்பியன் பெல்ட்டை இப்படியே விட்டுவிட்டு செல்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இறைவனின் துணை இருந்தால் மீண்டும் இந்த ரிங்கில் சந்திக்கிறேன்"  என அவர் கூற இனிமேல் நமது நாயகனை காண இயலாதோ என ரசிகர்கள் கதறினார்கள்.

WWE போட்டிகள் ஒரு நாடகம் போலதான் என்றாலும் கூட அதனை மக்கள் ரசிக்கும் படியாக கொண்டு சென்றவர் ரோமன் ஸ்பியர்.அந்த காரணத்தினால் தானோ என்னவோ அவர் இல்லாத போட்டிகள் ரசிகர்களிடையே பெரிய அளவிற்கு எடுபடவில்லை.

இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு நற்செய்தியாக,பல மாதங்களாக புற்றுநோய் சிகிச்சையில் இருந்த WWE சாம்பியன் ரோமன் ரெய்ன்ஸ் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.புற்றுநோயோடு சண்டையிட்டு மீண்டும் எங்கள் ஹீரோ திரும்ப வருகிறார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

TWITTER, WWE RAW, ROMAN REIGNS, LEUKAEMIA BATTLE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்