'பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ''தோனி'' ஆக முடியாது'...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsஇந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை குவித்தும் தோல்வியை தழுவியது.
மொஹாலியில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்யை’ தேர்வு செய்தார். இதில் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். இதனிடையே பேட்டிங்கை தேர்வுசெய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 50ஓவர்கள் முடிவில்,9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. தவான் அபாரமாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 47.5 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியினை பெற்றது.இந்திய அணி தோற்பதற்கு முக்கிய காரணம் மோசமான பீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவறவிட்ட முக்கியமான ஸ்டம்பிங்.விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவறவிட்ட ஸ்டெம்பிங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே தோனியின் அருமை தற்போது புரிகிறதா என நெட்டிசன்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
World Cup ke audition me fail ho gaye aap#RishabhPant pic.twitter.com/JdJ06qVXeV
— Omee (@Umeshmohnani1) March 10, 2019
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- நீங்களும் அந்த நிகழ்ச்சியில கலந்துப்பீங்களா? இந்திய கிரிக்கெட் வீரரின் வைரலான பதில்!
- 'உங்க டீம்ல சச்சின், லாராவை விட...இவர் தான் பெஸ்ட்'...ஏன் அவர் அப்படி சொன்னாரு?
- 'மைதானத்தில் இந்திய வீரரின் உணர்வு பூர்வமான செயல்'...புகழும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ!
- 'நெருங்கும் உலகக்கோப்பை'...'தல' நீங்க ரெஸ்ட் எடுங்க...'தோனிக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர்'!
- 'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு'...புதிய உலக சாதனை படைத்து...சச்சினை நெருங்கும் கோலி!
- மைதானமே அதிர்ந்த ‘தல’தோனி எடுத்த மின்னல் வேக ரன் அவுட்.. வைரல் வீடியோ!
- ‘தனி ஒருவனாக’ நின்ற விராட் கோலி.. வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!
- 'சொந்த மண்ணில்'தல'யின் கடைசிப் போட்டி'?...ரொம்ப மிஸ் பண்ணுவோம்...நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
- 'ரிஷாப் பன்டிற்கு அடித்தது ஜாக்பாட்'...தமிழக வீரரை கழற்றி விட்ட பிசிசிஐ...மீண்டும் அசத்திய பும்ரா!
- வயது தடையில்லை, திறமை போதும்.. உலகக்கோப்பைக்குப் பின் தோனி விளையாட வேண்டும்.. கூறிய முன்னாள் வீரர்!