அந்த குழந்தைகளை இப்படி கிண்டல் பண்ணலாமா?...வலுக்கும் எதிர்ப்பு...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை அவமதிக்கும் வகையில் மோடி பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.சமூகவலைத்தளம் உட்பட பலரும் அதனை கண்டித்து வருகிறார்கள்.

காரக்பூர் ஐ.ஐ.டியில் மாணவர்களோடு கலந்துரையாடும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.அதில் மாணவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.`ஸ்மார்ட் இந்தியா ஹெக்கத்தான் 2019’ என்ற அந்த நிகழ்ச்சியில் 48 மையங்களைச் சேர்ந்த 1,300 மாணவக் குழுக்கள் கலந்துகொண்டனர்.இந்த கலந்துரையாடலின் போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

அப்போது மாணவி ஒருவர் டிஸ்லெக்சியா எனும் கற்றல் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தான் செய்யும் உதவிகள் குறித்து பிரதமரிடம் விளக்கி கொண்டிருந்தார்.நன்றாக புத்திக்கூர்மை மற்றும் புதிய படைப்பு திறனுடைய மாணவர்கள்,வாசிப்பு மற்றும் எழுதுவதில் உள்ள குறைபாடுகளே டிஸ்லெக்சியா நோயின் பாதிப்புகள் ஆகும்.இவ்வாறு அந்த மாணவி பேசிக்கொண்டிருக்கும் போது இடைமறித்த மோடி, `40-50 வயதுடைய குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாதிப்பு உண்டாகுமா?’  என கேட்க அங்கிருந்த மாணவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

மோடி மறைமுகமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை கிண்டலடித்து அந்த மாணவிக்கு புரியவில்லை.அவரும் உடனே இவ்வகையான பாதிப்பு 40-50 வயதுடையவர்களுக்கும் வரும்’ என்றார்.உடனே அதற்கு பதிலளித்த மோடி ''அப்படியென்றால் அவர்களின் தாய் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்'' என மீண்டும் கிண்டல் செய்தார்.மோடியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்லெக்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் மன உறுதியோடு அந்த நோயிலிருந்து மீள்வதற்காக போராடி வருகிறார்கள்.ஆனால் நாட்டின் பிரதமர் தன்னுடைய எதிர் கட்சியை சேர்ந்தவரை விமர்சிப்பதாக நினைத்து டிஸ்லெக்சியா நோயினால் பாதிக்கப்பட்டோரை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.இது மிகவும் தரம் தாழ்ந்த செயல்.நாட்டின் பிரதமர் இப்படி நடந்து கொள்வது வெட்கக்கேடானது என கடுமையாக தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.மோடி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

NARENDRAMODI, BJP, CONGRESS, RAHULGANDHI, DYSLEXIA, SMART INDIA HACKATHON, IIT ROORKEE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்