'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடிக்கு எங்கு செல்வாக்கு மிக குறைவு என்ற விவரம் தெரியவந்துள்ளது.

மோடியின் செல்வாக்கு குறித்து, இந்தியாவின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் 60 ஆயிரம் வாக்காளர்களிடம் சி ஓட்டர் என்ற தேர்தல் கருத்துக் கணிப்பு கள ஆய்வு ஒன்றை நடத்தியது.அந்த ஆய்வில் வட மாநிலங்களில் மோடிக்கு அதிகமான செல்வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.அதில் அதிகமாக ஜார்க்கண்ட் மாநில மக்கள் 74 சதவீதம் பேர் மோடிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மோடியின் மதம் சார்ந்த அரசியல்,வளர்ச்சி திட்டங்களில் தென் மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுதல்,மொழி சார்ந்த விஷயங்களில் மத்திய அரசின் நெருக்கடி போன்ற காரணங்களால், தென்னிந்திய மோடிக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில்,மக்களில் பெரும் பிரச்சனைகளாக பார்க்கப்படும் காவேரி நதிநீர் பங்கீடு, ஜல்லிக்கட்டுப் போட்டி ஆகியவற்றில் மோடியின் பார்வை தமிழக மக்களுக்கு எதிராகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால்,தமிழகத்தில் வெறும் 2.2 சதவிகித மக்கள் மட்டுமே மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.அதுவும் எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் GO BACK MODI என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும்.இது மோடியின் மீது இருக்கும் வெறுப்பாக மட்டும் அல்லாமல் அவர் மீது இருக்கும் அதிருப்தியைக் காட்டுவதாகவே கருதப்படுகிறது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்