'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை அழைத்து வர இந்தியா வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதனால் பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன்,பாகிஸ்தானில் தரையிறங்கினார்.இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் அந்தநாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றார். பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை கைது செய்த தகவல் அறிந்ததும், அவரை பத்திரமாக மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.
இந்நிலையில் அமைதி நடவடிக்கையாக அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.இதனைத்தொடர்ந்து விமானம் மூலம் அவரை அழைத்துவர இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்து வரவும் முடிவு செய்தது.ஆனால் இந்திய அரசின் இந்த கோரிக்கையினை மறுத்த பாகிஸ்தான் அரசு,பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானம் பறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து விட்டது.
அபிநந்தனை அடாரி-வாகா எல்லைவழியாக மட்டுமே அனுப்ப முடியும் என பாகிஸ்தான் தீர்க்கமாக தெரிவித்துவிட்டது.இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அடாரி-வாகா எல்லை வழியாக அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ஆமா!...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை!
- ''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி!
- ‘பத்திரமா ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் போராட்டம்’: நெகிழும் இந்தியர்கள்!
- முக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்?.. பிரமிக்க வைக்கும் பின்னணி!
- 'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்!
- 'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்!
- 'ராணுவ விமானி அபிநந்தன் ஒரு வாரியர்’.. ‘கார்கில்’ புகழ் நச்சிகேட்டா நெகிழ்ச்சி!
- இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு!
- சித்ரவதை செய்யப்பட்டாரா அபிநந்தன்?.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ!
- 'காணாமல் போன ஒரு விமானி பாகிஸ்தான் வசம் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறோம்’!