ஆமா!...இப்போ வந்து சொல்லுங்க,அவர் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு...டென்ஷன் ஆன இந்திய வீரர்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

இந்திய அணி இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது தான்,விக்கெட் எடுப்பதற்கு தோனி எவ்வளவு தேவை என்பதனை இந்தியா உணரும் என,இந்திய அணியின்  முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

நேற்று மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில்,டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பேட்டிங் செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி,9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்ககள் எடுத்து அசத்தியது.இதனிடையே இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியினை வெற்றிக்கு அழைத்து சென்றார்கள்.

ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.அதிகமான ரன்கள் அடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற இயலாமல் போனது ரசிகர்களிடையே கடும் கோபத்தை எழுப்பியுள்ளது.இதற்கு மோசமான பீல்டிங் மற்றும் ரிசப் பண்ட தவறவிட்ட ஸ்டெம்பிங் தான் காரணம் கேப்டன் கோலி கூறினார்.இந்நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ''சமீபகாலத்தில் இந்தியாவின் மிக கேவலமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இது என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் கைக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வீரர்கள் தவற விட்டு விட்டார்கள்.இப்போது தான் தோனியின் அருமை அனைவருக்கும் புரியும்.இதுபோன்ற நேரங்களில் ஸ்டெம்பிற்கு பின்னல் தோனி நிற்பது எவ்வளவு பலம்வாய்ந்த ஒன்று என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

MSDHONI, CRICKET, BCCI, MOHAMMAD KAIF, INDVAUS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்