'தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு'...புதிய உலக சாதனை படைத்து...சச்சினை நெருங்கும் கோலி!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் அரங்கில் 41வது சதம் அடித்து அசத்தினார். மேலும் குறைந்த இன்னிங்சில் கேப்டனாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையம் படைத்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது.இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்யை’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பின்ச் (93), கவாஜா (104) அதிரடியாக ஆட ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் (1), ரோகித் சர்மா (14), ராயுடு (2) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்ப,சொந்த மண்ணில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி 26 ரன்னில் ஜாம்பா சுழலில் போல்டானார்.

வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பிய போதும் தனி ஒருவனாக நின்ற இந்திய கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார்.மேலும் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது  41வது சத்தத்தை பதிவு செய்தார்.இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில், அதிக சதம் அடித்துள்ள இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் சாதனையை (49 சதம்) கோலி விரைவாக நெருங்கி வருகிறார்.அதோடு குறைந்த இன்னிங்சில் கேப்டனாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.இதன் மூலம் டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.

CRICKET, VIRATKOHLI, BCCI, 4000 RUNS, ODIS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்