'நடுஇரவில் திக்கு தெரியாதபோது, காஷ்மீரிகளுக்கு உதவிய சீக்கியர்கள்!'

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

புல்வாமாவில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் துணைநிலை ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

ஒருபுறம் பாகிஸ்தானின் மீது இந்தியா, இந்திய மக்கள், சிறுகுறு வியாபாரிகள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கோபத்தை காட்டினார்கள் என்றால், இன்னொரு புறம் காஷ்மீரின் மாணவர் எழுச்சி போராட்டமும், புல்வாமா பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்வு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டதும் சர்ச்சைக்குள்ளாகியது.

விளைவு வட மாநிலங்களின் பல இடங்களில் காஷ்மீரிகள் புறக்கணிக்கப்பட தொடங்கினர். அவர்களை அந்தந்த உள்ளூர்வாசிகளே எதிர்க்கத் துணிந்தனர். கல்லூரி, வேலை என பலவற்றின் நிமித்தமாக  இருந்த காஷ்மீரிகளை பலரும் தங்களது கடைகளுக்குள் அனுமதிக்கவும் மறுத்துள்ளனர்.

ஆனால் இந்த நிலையிலும் காஷ்மீரிகளுக்கு கைகொடுத்து தங்கள் ஊர்களில் தங்கவைத்தும் பத்திரமாக பஸ் அரேஞ்ச் செய்து ஏற்றி காஷ்மீருக்கு அனுப்பியதும் பஞ்சாபிகள்தான். சீக்கியர்கள்தான் தங்களுக்கென இந்த நாட்டில் இருக்கும் ஜீவன்கள் என்று வருந்தும் காஷ்மீரிகள் தாங்களும் இந்தியர்கள்தானே? தங்களுக்கு ஏன் இந்த நிலை என்று கையேந்தி நிற்கும்போது சீக்கியர்கள் கண் துடைத்துள்ளனர். நடுஇரவில் அந்நியர்களாக உணர்ந்த தங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் சீக்கியர்கள்தான் என்கின்றனர். 

இந்த உருகவைக்கும் நிகழ்வுகள்தான் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் கல்லறைகளில் ஒருமைப்பாட்டுணர்வாக கேட்கும் என்றும் அவர்கள் நெகிழ்கின்றனர். ஒரே இரவில் அச்சுறுத்தல்களுக்கு ஆட்பட்டு அகதியாய் மாறி ஓடி ஒளிய வேண்டிய நிற்கதிக்கு ஆளாகியிருந்த காஷ்மீரிகளுக்கு உதவ முன்வந்த முதல் தொண்டு நிறுவனம் பஞ்சாபியின் கல்சா உதவி மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

PULWAMAATTACK, HUMANITY

OTHER NEWS SHOTS