'அதிமுகவுடன் சேரலாம்னு இருந்தோம்'...இப்போ 'கூட்டணி கதவை மூடிட்டோம்'...ஜெ.தீபா அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பத்தின் காரணமாக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலளார் ஜெ.தீபா அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா நேற்று செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய தேர்தல் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.அப்போது பேசிய அவர் ''தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப  அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அதிமுகவுடன் உடன்பாடு எட்டப்படவில்லை அப்படி எட்டியிருந்தால் இன்று மெகா கூட்டணியில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இடம் பெற்றிருக்கும். அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த காரணத்தினால் தான்,நாடாளுமன்ற தேர்தல் குறித்த எனது நிலைப்பாடு சற்று தாமதமாக அறிவிக்கப்படுகிறது.இன்று வரை எனக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும்,தொண்டர்களின் ஆதரவோடு நான் நிற்கிறேன்.

இந்நிலையில் அதிமுகவுடன் சேர்ந்து செயல்பட 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்திருந்தோம். உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்துள்ளோம்.என  ஜெ.தீபா தெரிவித்தார்.

J DEEPA, AIADMK, ELECTIONS, LOK SABHA ELECTION

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்