'இன்னைக்கு பெரிய டாஸ்க் இருக்கு'...ஜெயிக்கபோறது அப்பாக்களின் ஆர்மியா?...இளம் தமிழரின் படையா?

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

ஐபிஎல் திருவிழா களைகட்ட தொடங்கிவிட்டது.அதுவும் சென்னை அணி பங்கேற்கும் போட்டி என்றால் ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்.முதல் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அபாரமாக வென்றது.எனேவ அந்த தெம்பில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை அணி இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி  3 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியினை அவர்களின் சொந்த மண்ணிலேயே பந்தாடியது.214 ரன்களை இலக்காக கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக உள்ளார்.இளம் வீரர்களை கொண்டிருக்கும் டெல்லி அணியினை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இன்றைய ஆட்டமானது தோனியின் புத்திசாலித்தனத்துக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரரான ரிஷப் பந்த்துக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது.இன்றைய போட்டியானது பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் ராகுல் டிவாட்டியாவுடன், அமித் மிஸ்ரா, லமிசான் என 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால் கணிசமான ரன்களை குவிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை - டெல்லி அணிகள் 18 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 12 ஆட்டங்களிலும், டெல்லி அணி 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்