'தலைமை சொல்றதுக்கு முன்னாடி முந்திய ஹெச்.ராஜா'... ஏன் அப்படி சொன்னார்?
முகப்பு > செய்திகள் > தமிழ் newsபாஜக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை வெளியிடும் முன், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா பெயர்களை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெ.ராஜா தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கைக்கு சென்றார்.அப்போது காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜனும், சிவகங்கைக்கு எச்.ராஜாவும், ராமநாதபுரத்துக்கு முன்னாள் மாநில அமைச்சர் நயினர் நாகேந்திரனும், கோயமுத்தூருக்கு சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தலைமையிடம் இருந்து வராத நிலையில் எச்.ராஜா எப்படி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் என்ற கேள்வி எழுந்தது.இதனிடையே எச்.ராஜா அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த வேட்பாளர்கள் பட்டியல் என்பது உத்தேசமானது என தகவல்கள் வெளியாகின.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘கமலின்’ கூட்டணிக் கட்சி சார்பில் தென் சென்னையில் நிற்கும் பவர் ஸ்டார்..?
- கோவாவில் மீண்டும் பாஜக: கண்ணீர் விட்டு அழுத புதிய முதல்வர்!
- இந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'!
- ‘இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்னப்பா செய்றது?’: கதறும் தேர்தல் உதவி மையம்!
- மாயாவதியின் அதிரடி முடிவு.. நாடாளுமன்ற அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்!
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு!
- 'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்!
- பிரியங்கா காந்தியை ‘பப்பி’ என்று சொன்னதால், சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
- முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது?
- ‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா?