'பொள்ளாச்சி பாலியல் கொடூரம் '...4 காமுகர்கள் மீது பாயும் குண்டர் சட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

தமிழகத்தையே உலுக்கி இருக்கும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய 4 கொடூரர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக கருதப்படும் தமிழ்நாட்டில்,அந்த பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நட்பாக பழகி பின்பு காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.அந்த பெண் மூலமாக பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன.

இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அதிமுக கட்சியே சேர்ந்த நாகராஜ் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இதனால் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும்,கட்சியின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ''பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துக்கொண்ட பெண்களின் விபரங்களை எடுத்தும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

POLICE, SEXUALABUSE, RAPE, POLLACHI SEXUAL ABUSE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்