6 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் பி.எஃப் பணத்துக்கான வட்டி விகிதம் உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதாச்சாரம் குறைந்த அளவு அதிகரித்தாலும் அது பலருக்கும் லாபகரமானதாகவே விளங்கும். அந்த வகையில் இந்தாண்டு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் கணிசமாக அதிகரிக்கப்படவில்லை என்றாலும், ஓரளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை கூட்டத்தில் பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் வழக்கத்தில் இருந்து 0.1 % அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டுக்கான வைப்பு நிதி (2018-2019) 8.65% ஆக இருக்கும் என தெரிகிறது.

மத்திய அரசின், இந்த வைப்பு நிதிக்கான சதவீதத்தை உயர்த்தும் முடிவால் 6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதிக்கான நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின்னரே, பி.எஃப் அறக்கட்டளையின் இந்த வட்டி விகித அதிகரிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் மார்ச்சில் இருந்து ஊழியர்களுக்கு பலன் தரத் தொடங்கும்.

முன்னதாக 2013-2014-ஆம் ஆண்டு மற்றும் 2014-2015-ஆம் ஆண்டுகளில் இதே வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதமாக 8.75 % வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் 2015-16-ஆம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம் 8.8 % ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தொழில் சார்ந்த பணவீக்கத்தினால் 2016-2017-ஆம் ஆண்டில் மீண்டும் 8.65 % ஆக குறைந்ததோடு, 2017-2018-ஆம் ஆண்டில் இது மேலும் 8.55 % ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டு மீண்டும் இந்திய பி.எஃப் அறக்கட்டளை மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.1 % அதிகரிக்கப்பட்டு சுமார் 6 கோடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 8.65 % வட்டிக்கு இனி வைப்பு நிதி கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால் வருகிற மார்ச் மாதத்துக்கு பிறகு வைப்பு நிதியை பெறவுள்ள ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

EPF, GOVT, INDIA, EMPLOYEES

OTHER NEWS SHOTS