'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.தேர்தலில், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

இதனிடையே நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஈரோடு மாவட்டம்  அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத் என்பவர் திருப்பூர் மக்களவை தேர்தலில்  போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.வேட்பு மனுதாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சேக் தாவூத்,சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தான் அளித்திருக்கும் 15 தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார்.

அதில் தனது தொகுதியில் இருக்கும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவி தொகையானது அரசிடம் இருந்து பெறப்படும்.மேலும் குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி சுத்தமானதாக  பாண்டிச்சேரியிலிருந்து வழங்கப்படும்.அதோடு அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் அரசிடம் இருந்து பெறுவதற்கு வலியுறுத்தப்படும் என சேக் தாவூத் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கூடாது என டெல்லியில் தொடர்ந்து போராடுவேன் என சேக் தாவூத்செய்தியாளர்களிடம் கூறினார்.

ELECTIONS, LOKSABHAELECTIONS2019, ELECTION MANIFESTO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்