'சூடா டீ குடிச்சா கேன்சர் வரும்'...புதிய குண்டை தூக்கி போட்டிருக்கும் ஆய்வு...என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

வாழ்கை முறையில் ஒன்றாக கலந்து விட்ட ஒரு பழக்கம் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்துவது.தேநீர் இல்லாமல் எனது தினமே ஆரம்பிக்காது என கூறும் மக்கள் தற்போது அதிகமாகி விட்டார்கள். அவர்களுக்கெல்லாம்  அபாய மணி அடிக்கும் விதத்தில் வந்திருக்கும் ஆய்வு தான் கதிகலங்க வைக்கிறது.

மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.இது அமெரிக்க புற்றுநோய் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 60 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு 700 எம்.எல் தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவீத அளவிற்கு புற்றுநோய் ஏற்படலாம் என அந்த ஆய்வு பகீர் கிளப்புகிறது.

இதனிடையே இதற்கான காரணத்தையும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.மனிதனின் வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகுவும் மிருதுவாக இருக்கும்.ஆனால் பெரும்பாலானோர் டீயையோ, காபியையோ குடிக்கும் போது அதிகப்படியான சூட்டோடு தான் குடிக்கிறார்கள்.இதனால் உணவுக்குழாயின்  சுவர்கள் பாதிக்கப்பட்டு அந்த திசுக்கள் சேதமடைகின்றன.அவ்வாறு சேதமடையும் பகுதியில் கேன்சர் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக புகையிலை பயன்படுத்துவோருக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்படும் என பெரும்பாலானோர் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நம்முடைய புத்துணர்ச்சிக்காக அருந்தும் தேநீர் கூட நமக்கு புற்றுநோயினை ஏற்படுத்தும் என்பது மிகவும் அதிர்ச்சியான உண்மை.

நமது வாழ்வியல் முறைகள் மாறும் போது நமக்கு பல்வேறு நோய்கள் வந்து சேர்கின்றன.பாரம்பரியமாக நாம் குடித்து வந்த கருப்பட்டி காபி(பனைவெல்லம் காபி),சுக்கு காபி எல்லாம் என்னவேற்று கேட்கும் நிலைக்கு பெரும்பாலான வீடுகள் வந்துவிட்டன.

இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு இரண்டு பேர் புற்றுநோயால் பாதிப்படைவதாகவும்,தினமும் ஏறத்தாழ 1300 பேர் புற்றுநோயால் இறப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.நமது பாரம்பரியமான வாழ்வியல் முறைகளை விட்டு நகரும் போது பல்வேறு நோய்களும் நமது கதவை வந்து தட்டுகிறது.

நிற்காமல் ஓடி கொண்டிருக்கும் தற்போதைய வாழ்வியல் சூழலில் உடற்பயிற்சி செய்வதற்கோ,சரியான உணவை உண்பதற்கோ ''எங்களுக்கு டைம் இல்ல பாஸ்'' என்ற ஒன்றை சொல்லை சொல்வதற்கு மட்டும் நமக்கு நேரம் இருக்கிறது.எனவே ஒவ்வொரு முறை தேநீர் கோப்பையை கையில் எடுப்பதற்கு முன்பு இதை மட்டும் எண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள் ''அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'.

CANCER, ESOPHAGEAL CANCER, TEA

OTHER NEWS SHOTS