இந்த 'அழகான வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்'...தேர்தல் பரப்புரையில் இறங்கிய 'உதயநிதி'!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsதென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,தேர்தலுக்கான பரப்புரையையில் அரசியல் காட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து இன்று தொடங்கினார்.அவர் திருவாரூரில் சாலையில் வீதி வீதியாக நடந்து சென்று திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவை திரட்டினார்.
இதனிடையே சென்னையில் தனது தேர்தல் பரப்புரையினை ,திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அவர்,தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய உதயநிதி 'இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.நான் அழகு என்று கூறியது அவரது தோற்றத்தை வைத்து மட்டுமல்ல.
அவர் பேசும் அழகு தமிழ்,மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அவரது கொள்கை,திமுகவின் மீது அவர் வைத்துள்ள ஆழமான கொள்கை ஆகியவற்றை வைத்து தான் நான் கூறினேன்.அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு என்பது மூன்று தலைமுறையினை கடந்தது ஆகும்.கலைஞர் கருணாநிதி மீது அவர் வைத்திருக்கும் அன்பும் பாசமும் நிச்சயம் அவருக்கு வெற்றியினை பெற்று தரும் என நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு!
- 'தல'க்கு எவ்வளவு தில்லு பாத்தியா'...'10 லிட்டர் பிராந்தி,ரூ.10 லட்சம் ...வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்!
- பிரியங்கா காந்தியை ‘பப்பி’ என்று சொன்னதால், சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
- கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் லிஸ்ட்?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- ‘பாஜக சார்பாக போட்டியிடும் ஜடேஜாவின் மனைவி’.. எந்த தொகுதி தெரியுமா?
- என்னாது? ‘அதிமுக- திமுக’வின் தேர்தல் அறிக்கை ஒரே மாதிரி இருக்கா?
- ஒரே ஒரு ஓட்டுக்காக.. 39 கி.மீ தொலைவு கடந்து வாக்குச்சாவடி.. அசத்திய தேர்தல் ஆணையம்!
- திமுக வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் கவிஞர், பாடலாசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்!
- நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கும் திரைப்பட இயக்குநர் கவுதமன்!
- 40-லும் தனியே தன்னந்தனியே.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அமமுக!