அன்று ‘மிஸ் இந்தியா’ இன்று ‘சிறந்த ஆசிரியருக்கான சர்வதேச விருது’.. கலக்கும் திரைப்பட நடிகை!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

இந்தியாவைச் சேர்ந்த ஸ்வரூப் ராவல் என்பவர் சிறந்த ஆசிரியர்களுக்கான சர்வதேச விருது பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த வர்க்கி பவுண்டேஷன் அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதும் கூடவே 1 மில்லியன் டாலர் பரிசு தொகையும் கொடுத்து வருகிறது. இந்த வருடம் சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு 179 நாடுகளில் இருந்து சுமார் பத்தாயிரம் பேர் வரை பரிந்துரைக்கப்பட்டது.

தற்போது 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்வரூப் ராவல் இடம் பிடித்துள்ளார். இவர் 1979 -ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகையான இவர் சில இந்திப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாஜக எம்பி பரேஷ் ராவல் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்வரூப் ராவல், கல்விப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பி.ஹெச்டி முடித்துள்ள இவர் இந்தியாவின் பல நாடுகளுக்கு சென்று கல்விப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இவரின் கல்விப் பணிகளை அறிந்த குஜராத் மாநில அரசு தங்களது மாநில கல்வித் திட்ட அதிகாரியாக ஸ்வரூப் ராவலை நியமித்துள்ளது.

TEACHER, AWARDS, BOLLYWOODACTRESS

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்