'நண்பன்' ஸ்டைலில் கல்யாணத்துக்கு போனா இதான் கதி'...பரபரப்பை கிளப்பியிருக்கும் 'கல்லூரி நோட்டீஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

திருமணத்திற்கான அழைப்பிதழ் இல்லாவிட்டால்,கல்லூரிக்கு அருகில் இருக்கும் திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் சென்று சாப்பிடக் கூடாது என கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.அதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

கல்லூரி வாழ்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும்.அதுவும் நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டால் ஒரே ரகளை தான்.அவ்வாறு கல்லூரி காலத்தில் மாணவர்கள் செய்யும் சேட்டைகள் ஏராளம்.அதிலும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள் குறித்து சொல்லவே தேவையில்லை.

பொதுவாக கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு மாணவர்களுக்கு பிடிப்பதில்லை.எனவே மாணவர்கள் தங்கள் நண்பர்களோடு சேர்ந்து விட்டால் தெரியாத திருமண வீடாக இருந்தாலும் அங்கு சென்று ஒரு கை பார்த்து விடுவார்கள்.ஆனால் அதற்கெல்லாம் தடை போடுவது போல் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில்  ''நமது கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், அருகில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் ஏதும் இல்லாமல், சென்று வருவதாக புகார் வந்துள்ளது. இனி இது போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்பு அமைந்துள்ளது.

இதனிடையே கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு நகலை யாரோ ஒரு நபர் ட்விட்டரில் பதிவிட,அதனை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

NIT COLLEGE, WEDDING INIVATION

OTHER NEWS SHOTS