'இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பார்க்க இவ்வளவு பேரா'.. அதிர்ச்சியில் உறைந்த ஐசிசி!
முகப்பு > செய்திகள் > தமிழ் newsஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண்பதை விட,இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை காண்பதற்கு அதிகமான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக,ஐசிசியின் போட்டியை நடத்தும் பிரிவின் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடர் என்றாலே அனல் பறக்கும்.அதிலும் உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோத போகிறது என்றால் உலகமே உற்று நோக்கும்.இதனிடையே கடந்த வாரம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் எதிரொலியாக உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.முன்னாள் வீரர்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியின் இயக்குர் ஸ்டீவ் எல்வொர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் ''உலகக்கோப்பை போட்டிகளில் மற்ற அணிகள் மோதும் போட்டியை விட,இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியானது மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.இந்த மைதானத்தில் மொத்த இருக்கைகள் 26000.ஆனால் இந்தப் போட்டியைக்காண மொத்தம் 4 லட்சம் ரசிகர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்,உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை விட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு விண்ணப்பத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இறுதி போட்டியை காண்பதற்கு 2.7 லட்சம் ரசிகர்கள்தான் விண்ணப்பித்துள்ளனர்'' என ஸ்டீவ் எல்வொர்த்தி தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS