கோலியை நெருங்கும் அதிரடி பேட்ஸ்மேன், முதலிடம் பறிபோக வாய்ப்பு உள்ளதா?

முகப்பு > செய்திகள் > Sports news
By |

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரரன விராட் கோலியின் முதல் இடத்தை நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் நெருங்கி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் நெருங்கி வருகிறார்.

முன்னதாக இந்தியா அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியன்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து நடந்து முடிந்த வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் வில்லியன்சன் 200 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதற்குமுன் டெஸ்ட் போட்டிகளில் 897 புள்ளிகளுடன் இருந்த வில்லியம்சன், இந்த இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் 915 பெற்று டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்தார்.

இதனை அடுத்து டெஸ்ட் தரவரிசையில் கோலியின் முதல் இடத்தைப் பிடிக்க, வில்லியம்சனுக்கும் இன்னும் 7 புள்ளிகள்தான் தேவையாக உள்ளது.

VIRATKOHLI, KANEWILLIAMSON, ICC, TEST

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்